Advertisment

சதமடித்த பெட்ரோல் விலை - பங்குகள் மூடல்!

petrol

இந்தியாவில்பெட்ரோல்- டீசல்விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. பெட்ரோல்விலை 100-ஐ நெருங்குவதால், பெட்ரோல், டீசல்மீதான வரியைக் குறைக்கவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

Advertisment

இந்தநிலையில் மஹாராஷ்டிராவில் சதமடித்துள்ளது பெட்ரோல் விலை. அம்மாநிலத்தின் பர்பானி மாவட்டத்தில், துணைப்பொருட்களுடன் சேர்த்துஒரு லிட்டர்பெட்ரோல்விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது. அதேபோல், மத்திய பிரதேசத்தின் போபாலில், பிரீமியம் பெட்ரோல்நூறு ரூபாயைத் தொட்டுள்ளது. இதனால், இரண்டு இலக்கத்தில் மட்டுமேவிலைக்காட்டும் வசதியைவைத்திருக்கும் பெட்ரோல்நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

Advertisment

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் பெட்ரோல் விலை 99.29 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95.21 ரூபாய்க்கும், சென்னையில் பெட்ரோல் விலை 90.96 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

அதேநேரம், பாஜக ஆளும் அஸாம் மாநிலத்தில் பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட 5 ரூபாய் கூடுதல் வரிரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் கரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது விதிக்கப்பட்ட இந்த கூடுதல் வரி, அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

petrol Diesel petrol price hike Rajasthan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe