Advertisment

வேலைக்குவராத பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டிவைத்து அடிக்கும் வைரல் வீடியோ!!

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 5 நாட்கள் வேலைக்கு வராததால் ஆத்திரம் அடைந்த பெட்ரோல் பங்க் முதலாளி ஊழியரை கட்டிவைத்து அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

மத்திய பிரதேசத்தில்ஹோஷங்காபாத்தில்என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைசெய்துவரும் ஒரு ஊழியர் ஒரு வாரத்திற்கு மேல் விடுப்பு எடுத்துள்ளார். அதனை கண்டிக்க முதலாளி அந்த ஊழியரை பெட்ரோல் பங்கிலுள்ள ஒரு தூணில் கட்டிப்போட்டு கடுமையாக அடித்துள்ளார். அப்படி தாக்கும்பொழுது ஊழியர் தனக்கு காலில் அடிபட்டது எனவேதான் என்னால் வேலைக்கு வரமுடியவில்லை என விளக்கம் கூறுகிறார். ஆனால் அதையும் பொருட்படுத்தமால் அந்த முதலாளி அந்த ஊழியரை தாக்குக்கிறார்.

Advertisment

இந்த காட்சியைஅருகிலுள்ள மற்ற ஊழியர் வீடியோவாக பதிவுசெய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தாக்குதல் வீடியோ பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டிவைத்து சரமாரியாக அடித்த அந்த முதலாளி மற்றும் மேலும்ஒருவர் என இந்த தாக்குதல் தொடர்பாகமொத்தம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

petrol bunk attacked
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe