இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தன. இந்நிலையில் ஜார்க்கண்ட்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலை 25 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பு ஜனவரி 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும்ஹேமந்த் சோரன் கூறியுள்ளார். பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.