style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
வரலாறு காணாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எதிர்த்தும்மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும்அகில இந்திய காங்கிரஸ் நாடு முழுவதும் ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதேபோல் பல இடதுசாரி அமைப்புகளும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. முதலில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவினார்ராகுல்காந்தி. அதன் பின் ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா வரை காங்கிரஸ் கட்சியினர்பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதேபோல் நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டங்கள், பேரணிகள் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.