ADVERTISEMENT

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர முடியாது -நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்

03:40 PM Jun 26, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது என நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜீவ்குமார் தேர்விவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி வரி அதிகமாக 28 சதவிகிதம் இருக்கும் நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் பெட்ரோல் மாறும் டீசல் மீது உட்சபட்ச வாரியாக 90 சதவிகிதம் வசூலிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வருவாயை குறைத்துக்கொள்ள எந்த மாநிலமும் முன்வராது.

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டியோடு இணைக்க உட்சபட்ச வரிவிகிதத்தை சேர்க்கலாம் என்றும் அப்படி செய்ய ஜி.எஸ்.டியில் பல புதிய மாற்றங்களை கொண்டுவர சில காலம் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவருவதென்பது நல்ல யோசனைதான் என்றாலும் எல்லா மாநிலங்களும் முதலில் பெட்ரோல் டீசல் வரி உயர்வை குறைத்து ஒரே சீரனாக கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும் குறைந்து விற்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT