Skip to main content

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர முடியாது -நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

 

gst

 

 

 

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது என நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜீவ்குமார் தேர்விவித்துள்ளார்.

 

ஜி.எஸ்.டி வரி அதிகமாக 28 சதவிகிதம் இருக்கும் நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் பெட்ரோல் மாறும் டீசல் மீது உட்சபட்ச வாரியாக 90 சதவிகிதம் வசூலிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வருவாயை குறைத்துக்கொள்ள எந்த மாநிலமும் முன்வராது.

 

 

 

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டியோடு இணைக்க உட்சபட்ச வரிவிகிதத்தை சேர்க்கலாம் என்றும் அப்படி செய்ய ஜி.எஸ்.டியில் பல புதிய மாற்றங்களை கொண்டுவர சில காலம் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவருவதென்பது நல்ல யோசனைதான் என்றாலும் எல்லா மாநிலங்களும் முதலில் பெட்ரோல் டீசல் வரி உயர்வை குறைத்து ஒரே சீரனாக கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

 

இதனிடையே சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும் குறைந்து விற்கப்படுகிறது.    

சார்ந்த செய்திகள்

Next Story

“போலி பில் தயாரித்தால் ஜி.எஸ்.டி பதிவு முடக்கப்படும்” - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Minister moorthy warns GST registration will be disabled if fake bill is produced

அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னையில், பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (09-02-24) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரிகளினுடைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்களுடைய ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்க லஞ்சம்; கையும் களவுமாகச் சிக்கிய வணிகவரி அலுவலர்

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

Commercial tax officer arrested for demanding bribe to issue GST certificate

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தைச் சேர்ந்தவர் செபஸ்தியன் மகன் சேசு. இவர் மணப்பாறையில் சேசு நகைப் பட்டறை என்ற பெயரில் கடை வைத்து நகைத் தொழில் செய்து வருகிறார். இவரால் செய்யப்படும் தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டி உள்ளது. அதற்காகத் தனது கடையின் பெயரில் ஜிஎஸ்டி சான்றிதழ் வேண்டி மணப்பாறையில் உள்ள வணிகவரி அலுவலகத்திற்குக் கடந்த 25 ஆம் தேதியன்று ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார். வணிகவரித் துறையில் இருந்து ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்குவதற்கு அரசு கட்டணம் எதுவும் பெறப்படுவது கிடையாது.  

 

சேசுவின் விண்ணப்பத்தின் பேரில் நேற்று(4.7.2023) வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்து சேசுவின் கடையை ஆய்வு செய்துவிட்டு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கூறியுள்ளனர். அன்று மாலையே சேசு மணப்பாறையில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்த வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி என்பவரை சந்தித்து தனது கடைக்கு ஜிஎஸ்டி சான்றிதழ் வழங்குமாறு கூறியுள்ளார். 

 

வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி சேசுவிடம் 2000 ரூபாய் கொடுத்தால் ஜிஎஸ்டி சான்றிதழ் உங்களது கடைக்கு வழங்குவோம் என்று கட்டாயமாகக் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சேசு, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் இன்று காலை அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் மற்றும் திருமதி சேவியர் ராணி ஆகியோர் கொண்ட குழுவினர், இன்று மதியம் ஒரு மணி அளவில் சேசுவிடமிருந்து வணிகவரி அலுவலர் கோவிந்தசாமி 2000 லஞ்சமாகப் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாகப் பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.