Skip to main content

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர முடியாது -நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ்

Published on 26/06/2018 | Edited on 26/06/2018

 

gst

 

 

 

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது என நிதி ஆயோக்கின் துணை தலைவர் ராஜீவ்குமார் தேர்விவித்துள்ளார்.

 

ஜி.எஸ்.டி வரி அதிகமாக 28 சதவிகிதம் இருக்கும் நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் பெட்ரோல் மாறும் டீசல் மீது உட்சபட்ச வாரியாக 90 சதவிகிதம் வசூலிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வருவாயை குறைத்துக்கொள்ள எந்த மாநிலமும் முன்வராது.

 

 

 

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டியோடு இணைக்க உட்சபட்ச வரிவிகிதத்தை சேர்க்கலாம் என்றும் அப்படி செய்ய ஜி.எஸ்.டியில் பல புதிய மாற்றங்களை கொண்டுவர சில காலம் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவருவதென்பது நல்ல யோசனைதான் என்றாலும் எல்லா மாநிலங்களும் முதலில் பெட்ரோல் டீசல் வரி உயர்வை குறைத்து ஒரே சீரனாக கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

 

இதனிடையே சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும் குறைந்து விற்கப்படுகிறது.    

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜி.எஸ்.டி: வரி அல்ல… வழிப்பறி” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
GST Not a tax a waybust says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘ஜி.எஸ்.டி.: வரி அல்ல… வழிப்பறி’ எனக் குறிப்பிட்டு புகைப்படத்துடன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்’ என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், ‘ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி!. ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?. ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டியைப் பார்த்து காப்பர் சிங் டேக்ஸ் (Gabbar Singh Tax) எனப் புலம்புகின்றனர்!. 

GST Not a tax a waybust says CM MK Stalin

அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டுமா?. 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?. ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள். ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற இந்திய கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“போலி பில் தயாரித்தால் ஜி.எஸ்.டி பதிவு முடக்கப்படும்” - அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Minister moorthy warns GST registration will be disabled if fake bill is produced

அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்தால், சம்பந்தப்பட்ட நபர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னையில், பத்திரப் பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (09-02-24) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையருக்கான பணித்திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு அதிகாரிகளினுடைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர், அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து அவர்களுடைய ஜிஎஸ்டி பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.