உத்தரப்பிரதேசம் ஷியா மத்திய வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர்வசீம் ரிஸ்வி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனிலிருந்து 26 வாசகங்களை நீக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். குறிப்பிட்ட அந்த 26 வாசகங்களை இஸ்லாமியத் தீவிரவாதகுழுக்கள், இஸ்லாம் மீது நம்பிக்கை வைக்காதவர்கள்மீதும், பொதுமக்கள் மீதும் தாங்கள்நடத்தும் தாக்குதலுக்கு நியாயம் கற்பிக்கப் பயன்படுத்துவதாகக்கூறியிருந்தார்.
மேலும் அவர், அந்த 26 வாசகங்களில் சில இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, அவற்றை அரசியலமைப்புக்கு எதிரானது, செயல்படாத ஒன்று எனவும் அறிவிக்கக்கோரியிருந்தார். இந்த வழக்கிற்கு இஸ்லாமிய சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே, இந்த வழக்கு குறித்து தீவிரமாக இருக்கிறார்களா, இதைவிசாரிக்க வேண்டுமா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அதற்குவசீம் ரிஸ்வியின் வழக்கறிஞர், விசாரிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து,வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது முற்றிலும் அற்பத்தனமானதுஎனக் கூறி வழக்கைத்தள்ளுபடி செய்ததோடு, வசீம் ரிஸ்விக்கு50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாகத் தீர்ப்பளித்தனர்.