Advertisment

'பி.எம். கேர்ஸ்' நிதியை பொதுச் சொத்தாக அறிவிக்ககோரி வழக்கு! - மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்!

pm cares fund

கரோனா தடுப்புக்கு நிதி திரட்டும் நோக்கில் பிரதமர் மோடி, பிஎம் கேர்ஸ் என்ற நிதியத்தை கடந்தாண்டு தொடங்கினார். ஏற்கனவே பிரதமரின் நிவாரண நிதியம் இருக்கும்போது, இந்த புதிய நிதியம் எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின.

Advertisment

மேலும் இந்தபிஎம் கேர்ஸ் நிதியை பொதுக் கணக்கு குழுவால்தணிக்கை செய்யமுடியாது எனக் கூறப்பட்டதால், பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த நிதியத்திற்கு இதுவரை நிதியளித்தவர்கள் யார்? எவ்வளவு நிதி அளித்துள்ளார்கள் என்பது குறித்தபல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசிடமிருந்தோ, பிரதமரிடமிருந்தோபதில் வராததால், இன்று வரைபிஎம் கேர்ஸ் நிதியம்விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. மேலும்பிஎம் கேர்ஸ் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களிலும்விசாரணை நடைபெற்றது.

Advertisment

இந்தநிலையில்பிஎம் கேர்ஸ்நிதியை பொதுச் சொத்தாக அறிவிக்க வேண்டும்,பிஎம் கேர்ஸ்நிதியைத் தணிக்கை செய்து அவ்வப்போது அறிக்கை வெளியிட வேண்டும்.பிஎம் கேர்ஸ்க்குவழங்கப்பட நன்கொடைகள் மற்றும் அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக, 10 நாட்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

delhi high court pm cares
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe