Skip to main content

பீட்டாவின் புதிய கோரிக்கை

Published on 03/04/2018 | Edited on 03/04/2018
peta request

 

இனி பக் வகை நாய்களை விளம்பரங்களுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று பீட்டா வோடபோன் நிறுவனத்திற்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளது. இதில், அவை மற்ற நாய்கள்போல சாதாரண நாய்கள் இல்லை என்று கூறியுள்ளது.

வோடபோன் நிறுவனத்தின் சி.இ.ஓ சுனில் சூட்டிற்கு  பீட்டா எழுதியுள்ள கடிதத்தில், பக் வகை நாய்கள் அழகுக்காக மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட நாய் இனமாகும். இவை மற்ற நாய்கள் போல் கிடையாது இவை மூச்சுவிடுவதற்கு கூட சிரமப்படும் தன்மைகொண்டது. சமீபத்தில் கூட உங்கள் நிறுவன விளம்பரத்தில் 30 பக் நாய்களை உபயோகித்துள்ளீர்கள். இந்த வகை நாய்களை இந்தியாவில் பிரபலமாக்கியது உங்களின் விளம்பர்கள்தான் அதற்கு நன்றி. இந்தியர்கள் இதை விரும்புவதற்கு ஒரு காரணம் அமுங்கிய நிலையில் உள்ள மூக்கு, இரண்டு பெரிய முட்டையான கண்கள், சுருங்கிய நிலையில் உள்ள தோல்கள் ஆகியவைதான். நீங்கள் பக் வகை நாய்களை மட்டும் அல்ல, வேறு எந்த விலங்குகளையும் விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டாம்.

ஏனென்றால் படப்பிடிப்பு தளங்களில், அங்குள்ள விளக்குகள், சத்தங்கள், போன்றவை விலங்குகளின்  உடலிற்கு உகந்ததாக இருக்காது. மேலும் இந்தியாவின் தட்பவெப்ப நிலையினால் பக் இன நாய்களுக்கு பற்களில் ஏற்படும் நோய், முதுகு வலி, தோல் சம்பந்தமான நோய்கள், கண்களில் ஏற்படும் நோய்கள் என்று பல வித இன்னல்களுக்கு இந்த இன நாய்கள் ஆளாகின்றனர். அதனால் அவை இறக்கக்கூட நேரிடும். ஆகையால் பீட்டாவில் உள்ள பத்து லட்ச உறுப்பினர்களின் குரலாக இந்த கோரிக்கையை வைக்கின்றோம்.

சார்ந்த செய்திகள்

Next Story

பீட்டா அமைப்புடன் கூட்டணி - கோயிலுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய பிரியாமணி

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாகவுள்ளார் பிரியாமணி. கடந்த மாதம் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது மைதான், கன்னடத்தில் கைமாரா மற்றும் தமிழில் கொட்டேஷன் கேங் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Priyamani donate mechanical elephant to Kerala temple with peta

இந்த நிலையில், பீட்டா அமைப்புடன் இணைந்து இயந்திர யானையை கோவிலுக்குப் பரிசாக வழங்கியுள்ளார் பிரியாமணி. கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக இயந்திர யானைகளை கோவில்களில் இடம்பெறச் செய்யும் புதிய திட்டத்தை பீட்டா அமைப்பு முன்னெடுத்து வருகிறது. இந்த முன்னெடுப்பில் அவர்களுடன் கைகோர்த்த பிரியாமணி, கேரளா கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு, இயந்திர யானையை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளார். இந்த கோயிலில் யானைகளை சொந்தமாக வைத்திருக்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ கூடாது என்ற முடிவை பின்பற்றி வருகிறார்கள். இயந்திர யானைக்கு மகாதேவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது இயந்திர யானை இதுவாகும்.

இது குறித்துப் பேசிய அவர், “தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் நமது வளமான கலாச்சார நடைமுறைகளையும் பாரம்பரியத்தையும் பராமரிக்க முடியும்” என்றுள்ளார்.

Next Story

"மீண்டும் நிர்வாணமாக நடிக்க வேண்டும்" - ரன்வீர் சிங்கிற்கு பீட்டா நிறுவனம் அழைப்பு

Published on 05/08/2022 | Edited on 05/08/2022

 

peta Company invites Ranveer Singh to act his ad

 

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் ரன்வீர் சிங் தற்போது 'சர்க்கஸ்' மற்றும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஃபேஷன் மற்றும் மாடலிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ரன்வீர் சிங். அந்த வகையில் சமீபத்தில் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இவரது இந்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது, இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டது. மேலும் மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக நூதன முறையில் சிலர் போராட்டமும் நடத்தினர். இப்படி பலதரப்பிடம் இருந்த எதிர்ப்பு கிளம்ப சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் ரன்வீர் சிங்கிடம் பீட்டா அமைப்பு தங்கள் 'ட்ரை வேகன்' பிரச்சாரத்துக்காக மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்கும்படி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "பீட்டா இந்திய அமைப்பு சார்பாக வாழ்த்துக்கள். சமீபத்தில் உங்கள் ஃபோட்டோஷூட்டை பார்த்தோம். எனவே எங்கள் அமைப்பு, 'அனைத்து விலங்குகளும் ஒரே பாகங்களைக் கொண்டவை' என்ற கோஷத்துடன் நடத்தும் பிரச்சார விளம்பர படத்தில் நிர்வாணமாக நடிக்க பரிசீலிப்பீர்களா" என கேட்டுள்ளனர்.

 

ஏற்கனவே பீட்டா அமைப்பு இதே கோஷத்துடன் நடத்திய பிரச்சார விளம்பரத்தில் அமெரிக்க நடிகையும் மாடலுமான பமீலா ஆண்டர்சன் அரை நிர்வாணமாக நடித்துள்ளார். இந்த தகவலையும் அந்த அழைப்பு கடிதத்தில் பீட்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் குறித்து ரன்வீர் சிங் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.