/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mrg-ni.jpg)
உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹமிர்பூர் பகுதியைச் சேர்ந்தபொறியாளரான இளைஞர்ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, அடுத்த நாளான 4 ஆம் தேதி அன்று அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, அந்த இளைஞர் பாலியல் செயல்திறன் அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு தனது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். இதில், அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, மணமகளை அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 10 ஆம் தேதி அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள்இந்த சம்பவம் குறித்து, இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, உயிரிழந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கூறுகையில், அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அளவுக்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளதாகவும், அவரது அந்தரங்க பகுதியில் ஏற்பட்ட காயங்களில்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)