/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_649.jpg)
பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி ஜிப்மரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி மற்றும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக புதுச்சேரிக்கு வருகைதரும் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாகப் பல்வேறுஇயக்கங்கள் அறிவித்திருந்தன. அதன்படி சட்டக்கல்லூரி அருகே கறுப்பு பலூன்கள் பறக்கவிட்ட புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கஜா, நிவர் புயல், கரோனா போன்ற பேரழிவுக் காலங்களில்கூட தமிழர்களுக்கு நிதி வழங்கவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்து இந்திக் காரர்களைக் கொண்டுவந்து திணித்துக் கொண்டிருப்பதாகவும், சாகர்மாலா திட்டமென்ற பெயரில், மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தி,அந்த இடங்கள்கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக்கொடுக்கப்படுகிறது. மேலும், புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி அளிக்க மறுப்பதைக் கண்டித்தும் வழுதாவூர் சாலை வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி, தமிழர்களம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல், மோடி வருகையை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையில் லாஸ்பேட்டை பகுதியில் கறுப்பு பலூன் பறக்கவிட்டு எதிர்ப்பினை தெரிவித்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)