Advertisment

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக சிவன் வேடமிட்டு போராடியவர் கைது!

The person who fought against the rise in petrol prices in the guise of Shiva was arrested!

Advertisment

சிவன் வேடமிட்டு பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராகப் போராடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அசாம் மாநிலம் நாகோன் என்ற இடத்தில் பெட்ரோல் விலை உயர்வு மற்றும் வேலை இல்லா திண்டாட்டம் குறித்து சிவன் மற்றும் பார்வதி வேடமணிந்து ஒரு குழுவினர் வீதி நாடகம் நடத்தினர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்த நிலையில், கடவுள்களில் வேடமிட்டு மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக அசாம் மாநில பாஜகவினர் கண்டனம் தெரிவித்ததோடு போலீசாரிடம் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து சிவன் வேடமிட்ட அந்த நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இதுவரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

police Assam Shivan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe