/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/snakeni.jpg)
தன்னைக் கடித்தபாம்பை மூடநம்பிக்கையால் மீண்டும் திருப்பிக் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ரஜெலி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் லோஹர் (35). இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி இவர், தனது வேலையை முடித்துவிட்டு ரயில் தண்டவாளம் அருகே உள்ள வனப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பாம்பு ஒன்று கடித்துள்ளது.
தன்னைக் கடித்த பாம்பை திருப்பி கடித்தால், பாம்பின் உடலில் இருக்கும் விஷம் தன்னை ஒன்றும் செய்யாது என்ற மூட நம்பிக்கை சந்தோஷ் லோஹருக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மூடநம்பிக்கையின் காரணமாக, சந்தோஷ் அந்தப் பாம்பை பிடித்து 3 முறை கடித்து உள்ளார். இதில் அந்தப் பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனையடுத்து, உடனடியாக அங்கிருந்த மற்ற ஊழியர்கள் சந்தோஷை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்து, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு, அவர் உடல்நலம் தேறியதையடுத்து அடுத்த நாள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)