அயோத்தியில் கேஎஃப்சி உணவகம் வைக்க அனுமதி... ஆனால் ஒரு கண்டிஷன்!

Permission to set up a KFC restaurant in Ayodhya and condition

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில்2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும்ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசிக்க வருவதால், அவர்களின் வசதிக்காக உள்ளூர் முதல் வெளிநாட்டு நிறுவனங்கள் வரை உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் திறப்பதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. அதே வேளையில், அந்த கோவிலைச் சுற்றியுள்ள 15 கி.மீ வரை அளவிலான இடத்தை சுற்றி அசைவ உணவகங்கள் விற்பனை செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தியில் இருந்து 15 கி.மீசுற்றளவில் அமைக்கப்படும் பன்னாட்டு நிறுவனமான கேஎஃப்சி உணவகம் போன்ற பன்னாட்டுஉணவகத்தில், அசைவ உணவகம் விற்பனை செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த உணவகங்களில் சைவ உணவுப் பட்டியல் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Ayodhya kfc
இதையும் படியுங்கள்
Subscribe