Advertisment

புதுவையில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Permission to open theaters in Puducherry

Advertisment

புதுச்சேரியில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் படிப்படியாக தளர்த்திக்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்படாத ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் புதுச்சேரியில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. புதுவையில் கரோனா தடுப்பு விதிமுறைகளுடன்இரவு 9 மணி வரை திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 பணியாளர்களுடன் திரைப்படம், தொலைக்காட்சி தொடர்களுக்கான படப்பிடிப்பு நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலா தலங்களில் கரோனா தடுப்பு விதிகளுடன் 50 சதவீத பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளுடன் இயங்கும் பார்கள் 50 சதவிகித பேருடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

corona virus theater Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe