புதுச்சேரியில் கடைகளை திறக்க முதல்வர் நாராயணசாமி அனுமதி!!

PUDUCHERRY

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது மூவாயிரத்தைக் கடந்திருக்கிறது. தமிழகத்தில் கரோனாஉறுதிசெய்யப்பட்டவர் எண்ணிக்கை 2,757 -லிருந்து 3,023 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் நாளை ஆலைகள், கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளைத் திறக்கவும்,உணவு விடுதிகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கவும்(பார்சல் மட்டுமே வழங்க அனுமதி) அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் புதுச்சேரியில் நாளை திறக்கப்படும் கடைகள், தொழிற்சாலைகளுக்கு வெளிமாநிலத்தவர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus Narayanasamy Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe