Skip to main content

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி!

Published on 15/12/2021 | Edited on 16/12/2021

 

்

 

தென்னாப்பிரிக்க நாடுகளில் உருவாகியதாகக் கூறப்படும் இந்தப் புதிய வகை கரோனா வைரஸ் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போதுவரை பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த வாரம் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், சில நாட்களில் இந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் 69 ஆக உயர்ந்துள்ளது. வட இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கண்டறியப்பட்ட இந்த தொற்று, இரண்டு நாட்களாக தென் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவிவருகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் 5க்கும் அதிகமான நபர்களுக்கு தொற்று இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் புதிதாக தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், அதனை வரவேற்கும் விதமாக ஆண்டுதோறும் பொது இடங்களில் இளைஞர்கள் கூடி கேக் வெட்டி, பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். குறிப்பாக, கடற்கரைகளில் அதிக அளவிலான இளைஞர் பட்டாளம் கூடி புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்த தொற்று பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31, ஜனவரி 1ம் தேதிகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்