Skip to main content

திருப்பதி கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி - ஆந்திர அரசு தகவல்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

jk


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 
 


இந்தியாவில் இதுவரை நான்கு கட்ட ஊரடங்கு முடிவடைந்து 5ஆம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள் முதலியன மூடப்பட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் படி வரும் 8ஆம் தேதி முதல் தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் திருப்பதி கோயிலில் சோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதிப்பது என்று ஆந்திர அரசு முடிவெடுத்துள்ளது. விரைவில் இந்த முயற்சி நடைமுறைக்கு வர இருப்பதாகவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

“கோயிலில் இருக்கேன்” - அரசியல் கேள்வியை தவிர்த்த ஜெயம் ரவி

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
jayam ravi omitted vijay political entry question

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக இறைவன் படம் வெளியானது. இதையடுத்து ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ள சைரன், ராஜேஷ் இயக்கியுள்ள பிரதர், புதுமுக இயக்குநர் இயக்கும் ஜீனி உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாகியுள்ளார்.  கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். 

இதில் சைரன் படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன் நடித்திருக்க ஆண்டனி பாக்கியராஜ் இயக்கியுள்ளார். சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இந்த நிலையில் ஜெயம் ரவி தனது மனைவியுடன் திருப்பதி கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது அடுத்தடுத்த படங்களைப் பற்றி சொன்னார். மேலும் மணிரத்னம் - கமலின் தக் லைஃப் படம் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார் பின்பு அவரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெயம் ரவி, “கோயிலில் இருக்கேன். என் படத்தை பற்றி ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள் சொல்கிறேன்” எனச் சொல்லிவிட்டு சென்றார்.