குஜராத்தை சேர்ந்த 4 விவசாயிகள் மீது தலா 1.05 கோடி நஷ்டஈடு கேட்டு பெப்சி நிறுவனம் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பெப்சி நிறுவனம் தயாரித்து வரும் "லேஸ் சிப்ஸ்" தயாரிப்பிற்காக பிரத்தியேக உருளைக்கிழங்கு வகையை பயன்படுத்தி வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு பெப்சி நிறுவனம் எப்.எல் 2027 என்ற புது வகை உருளைக்கிழங்கை கண்டறிந்து அதற்கு காப்புரிமை பெற்றது. அதன் பின் லேஸ் சிப்ஸுக்காக இந்த வகை உருளைக்கிழங்கை உற்பத்தி செய்ய சில விவசாயிகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்நிலையில் இருப்பில் இருந்த இந்த வகை உருளைக்கிழங்கின் விதைகளை ஒரு சில விவசாயிகள் காப்புரிமை பற்றி அறியாமல் பயிரிட்டுள்ளனர். இதன் காரணமாக பெப்சி நிறுவனம் இதனை பயிரிட்ட விவசாயிகள் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு பதிவு செய்தது. இதனை அடுத்து நாடு முழுவதும் பெப்சி நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
சமூகவலைத்தளங்கள் முழுவதும் பெப்சி நிறுவன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று கருத்துக்கள் பகிரப்பட்டன. இந்நிலையில் விவசாயிகளை ஒப்பந்தம் மேற்கொள்ள பெப்சி நிறுவனம் அழைத்தது. ஆனால் விவசாயிகள் ஒப்புக்கொள்ளாத நிலையில் தற்போது பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியில்லாமல் வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்சி நிறுவனம் அறிவித்துள்ளது.