ஆந்திர மாநிலம் நெல்லூரில்காவல்நிலையத்தில் சிலர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் எஸ்.ஐயின் மண்டை உடைந்தது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ராப்பூர் என்ற இடத்தில்பிச்சையா, ராஜாம்மா, கனகம்மா ஆகியோரிடம் கொடுத்த கடன் தொகையயை ஜோசப் என்பவர் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தரமுடியாது என மூவரும் கூறியதால் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் ஜோசப்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புகாரை ஏற்றுக்கொண்ட எஸ்.ஐ லக்ஷ்மணராவ் மூவரையும் காவல்நிலையத்திற்கு வரவழைத்து அவர்களது சாதிப்பற்றி பேசி அடித்ததாக கூறப்பட்ட நிலையில்பிச்சையாவின்உறவினர்கள் மற்ற கிராமமக்களை திரட்டிக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போதுநடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி காவல் நிலையத்தை சூரையாடினார். மேலும் எஸ்.ஐ லக்ஷ்மனராவை சரமாரியாக அடித்து உதைத்தனர். அடிக்கும் பொழுது அவர் சிறைக்குள் புகுந்து தப்ப முயன்றார் அப்போதும் விடமால் அவரை இழுத்து போட்டு கடுமையாக தாக்கினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த கொலைவெறி தாக்குதலில் எஸ்.ஐ லக்ஷ்மனராவின்மண்டை உடைந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தலையில்எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.