/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/besi.jpg)
இரண்டு நபர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை துன்புறுத்தும்சம்பவம்அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் பகுதியில் நேற்று முன்தினம் (14-12-24) நடுரோட்டில் வைத்து ஒரு பெண்ணை, இரண்டு நபர்கள் வலுக்கட்டாயமாக அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெண்ணை இரண்டு நபர்கள் அடித்து தங்களது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முயற்சிக்கின்றனர். மேலும், அந்த பெண்ணின் தலைமுடியை ஒருவர் பிடித்து துன்புறுத்துகிறார். இதனை பார்த்த அங்கிருந்த சில பெண்கள், அந்த நபர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அந்த நபர்கள் அவர்களையும் மீறி அந்த பெண்ணின் தலைமுடியே பிடித்து இழுத்து துன்புறுத்துகின்றனர்.
இந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அருகில் உள்ள கடையில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் விசாரணையில், பெண்ணை துன்புறுத்திய இரண்டு நபர்கள் விபுல் யாதவ் மற்றும் சஞ்சய் நிஷாத் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண்ணை நடுரோட்டில் அடித்து துன்புறுத்தும் சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)