Advertisment

மத்திய அரசு 15 லட்ச ரூபாய் தருகிறது என கூறி தபால் நிலையத்தில் குவிந்த மக்கள்... திணறிய ஊழியர்கள்...

தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால், அவர்களின் கணக்கில் மத்திய அரசு 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யும் என வதந்தி பரவியதால், மூணார் பகுதி தபால் நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.

Advertisment

people surround munnar post office after rumours

கடந்த மக்களவை தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் குடும்பத்திற்கும் 15 லட்ச ரூபாய் தருவதாக கூறி பாஜக அரசு ஏமாற்றியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்குகள் தொடங்கினால், மத்திய அரசு அதில் 15 லட்ச ரூபாயை டெபாசிட் செய்வதாக மூணார் பகுதியில் வதந்தி பரவியது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி உள்ள மக்கள் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்காக தபால் நிலையங்களில் குவிந்தனர்.

ஆனால் அங்கிருந்த ஊழியர்கள், அதுபோன்ற எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என கூறியுள்ளனர்.ஆனால் அதனை நம்பாத பொதுமக்கள், பல மணி நேரம் காத்திருந்து சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளனர்.

Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe