சாலைவிபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மூதாட்டிக்கு உதவாமல், பொதுமக்கள் கடந்துசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள சாலையில், இன்று காலை 65 வயதுமிக்க மூதாட்டி ஒருவர் சாலைவிபத்தில் சிக்கி காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார். அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள், அரசு வாகனங்கள் உட்பட சில கார்கள் மற்றும் பேருந்துகள் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வராமல், கடந்து சென்றன. மேலும், நடந்துசெல்லும் பொதுமக்களும் அவருக்கு உதவாமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். இந்தக்காட்சி அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இறுதியாக இளைஞர் ஒருவர் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வந்தபோது, அந்த வழியாக வந்த காவல்துறை வாகனத்தில் மூதாட்டி கூட்டிச்செல்லப்பார். தற்போது மூதாட்டி திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய 20 வயது வாலிபர்உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தது, விபத்தை ஏற்படுத்தியது, ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டியது ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப்பதியப்பட்டது.