Advertisment

'மாடியில் இருந்து குதித்த பிசினஸ்மேன்... வேடிக்கை பார்த்த பொதுமக்கள்' வெளியான வைரல் வீடியோ!

குஜராத் மாவட்டம் வாலாஜாத் மாவட்டத்தை சேர்ந்த வாபி டவுன் பகுதியில் உள்ள ஹோட்டலில் சூரத்தை சேர்ந்த பிசினஸ்மேன் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 51 வயதான அவர் தற்கொலைக்கு செய்வதற்கு முதல்நாள் ஹோட்டலுக்கு வந்து ரூம் எடுத்து தங்கியுள்ளார். சம்பவத்தன்று 5-வது மாடிக்கு சென்று எந்த இடத்தில் இருந்து குதிப்பது என இடம் பார்த்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் அவர் குதிக்கும்போது கீழே நின்ற மக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் தங்கள் மொபைலில் அவர் தற்கொலை செய்து கொண்டதை வீடியோ எடுத்தனர். ஒருசிலர் மட்டுமே குதிக்க வேண்டாம் என அவரைப்பார்த்து கத்தியுள்ளனர்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "அவரின் பெயர் பியூஸ் பச்சக்கர், ஜுவல்ஸ் தொழில் செய்கிறார். சூரத் பகுதியை சேர்ந்த பியூஸ் தனது வீட்டினரிடம் பிசினஸ் விஷயமாக செல்வதாக கூறிவிட்டு இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.அவரின் உடலை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பும் முன்பே அவரது தற்கொலை வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவிட்டது " என தெரிவித்துள்ளனர்.

sucide attempt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe