Advertisment

'குஜராத் மக்கள் இதில் சாதனை படைக்க வேண்டும்' - மோடி வேண்டுகோள்

'People of Gujarat should make a record in this'-Modi request

குஜராத்தில் ஆட்சி அமைப்பதற்காக பாஜக, காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் பல்வேறு வாக்குறுதிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். குஜராத் வரலாற்றில் இதுவரை காங்கிரஸ், பாஜக என இருமுனைப் போட்டியே நிலவி வந்தது.

Advertisment

தற்போது ஆம் ஆத்மியின் வருகையால் குஜராத் களம் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இந்தப்பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று குஜராத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.

Advertisment

இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தேர்தலில் அதிக வாக்காளர்கள் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும். முதல் முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையைக் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

Gujarath modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe