Skip to main content

மலிவு விலையில் வெங்காயம் வாங்க குவிந்தவர்களால் நேர்ந்த விபரீதம்!

வடமாநிலத்தின் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்தவுடனே, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், வெங்காய விலை தங்கத்தின் விலையை போல் உயர்ந்தது. தங்கத்தை பணம் இருக்கும்போதே வாங்கி பத்திரத்தப் படுத்தி வைப்பது போல், வெங்காயத்தை பெறுவதற்கான முனைப்பினை மக்கள் காட்டுகின்றனர்.

 


தமிழகத்தைப் பொருத்தவரை, வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படும் நிலையில், ஆந்திராவில் வெங்காய விலை கிலோ 95 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் ஆந்திர அரசின் தரப்பில் கிலோ 25 ரூபாய்க்கு தரப்படும் வெங்காயத்தினைப் பெற மக்கள் அலைமோதிக்கொள்ளும் சம்பவங்கள் வீடியோக்களாக இணையத்தில் வலம் வருகின்றன. இந்த வீடியோவில் ஒரு பெரியவரை இடித்துத் தள்ளிவிட்டு மக்கள் மலிவு விலை வெங்காயத்தை வாங்க ஓடுகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

 

இதை படிக்காம போயிடாதீங்க !