Advertisment

புத்தாண்டு கொண்டாட புதுச்சேரியில் குவியும் மக்கள்!

People flock to Pondicherry to celebrate the New Year!

Advertisment

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, புதுச்சேரியில் ஏராளமானோர் குவிந்து வரும் நிலையில், 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், அங்கு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தோர் புதுச்சேரியில் படையெடுத்துள்ளனர். அனைத்து விடுதிகளும் நிரம்பியுள்ளனர். ஏராளமான வாகனங்கள் புதுச்சேரியில் குவிந்திருப்பதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டைக் கொண்டாட்டத்தையொட்டி, கடற்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கண்காணிக்க 1,000- க்கும் மேற்பட்ட கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பாதுகாப்பு பணியில் 2,000 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Celebration newyear Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe