Advertisment

நாட்டு மக்கள் ஒரு நாள் ஊதியத்தை பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ வேண்டும்-கிரண்பேடி

kiran

புதுச்சேரி நகரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகள் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி,"கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் பிரதர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அவர் செய்வார். இருந்தபோதிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ வேண்டும்.

Advertisment

கேரள மக்கள் வெள்ள பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டுவர நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். முப்படையை சேர்ந்த வீரர்கள் கேரளாவில் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், நாம் அனைவரும் கேரளாவை நேசிப்பதால் நம்மால் இயன்ற உதவிகளையும் செய்ய வேண்டும்" என்றார்.

மேலும் ஹெல்மெட் கட்டாய சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "புதுச்சேரியில் முதலில் போலீசார் மற்றும் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியும் சட்டத்தை மதித்து இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அதன்மூலம் பொதுமக்களுக்கு தானாக விழிப்புணர்வு ஏற்படும்" என்றார்.

flood kerala flood kiran pedi Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe