Advertisment

'அகண்ட பாரதத்திற்காக நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும்' -செங்கோட்டையில் மோடி உரை

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது.

Advertisment

ஆயிரக்கணக்கானோர் அங்கே பிரதமர் மோடியின் உரை கேட்பதற்காக கூடியுள்ளனர். முன்னதாக ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பின்னர் செங்கோட்டை சென்று மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரம் அங்கு சாரல் மழை பொழிந்தது.

Advertisment

செங்கோட்டை வந்த பிரதமர் மோடி 11 ஆவதுமுறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். முப்படையின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து உரையை தொடங்கிய பிரதமர் மோடி, 'பாரத் மாதா கி ஜே.... பாரத் மாதா கி ஜே...' என மூன்று முறை உச்சரித்து விட்டு,பேசத் தொடங்கினார். அவரது உரையில், ''நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை இந்த நேரத்தில் போற்றுகிறேன். விவசாயிகளும் ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன் பட்டுள்ளோம். வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகள் வருத்தத்தை அளிக்கிறது. 40 கோடி மக்கள் தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தனர். தற்பொழுது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் நாட்டின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். உத்வேகமாக செயல்பட்டால் 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதமாக நாம் உருவாக முடியும். ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன' எனத் தொடர்ந்துஉரையாற்றிவருகிறார்.

Delhi independence day. modi red fort
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe