Skip to main content

அஞ்சலக தேர்வு தமிழில் எழுதலாம்.. மத்திய அரசு அனுமதி..!

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 

People can write Post office exam in tamil


அஞ்சலக கணக்கர் தேர்வை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 


அஞ்சலக கணக்கர் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத முடிவதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் அரசியல் கட்சிகள் சார்பிலும் மத்திய அரசுக்குக் கண்டனங்கள் எழுந்திருந்தது. மேலும் டி.ஆர்.பாலு, சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு, அஞ்சலக தேர்வு தமிழிலும் இருக்க வேண்டும் என கடிதம் எழுதினர். 

 


அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் சந்தோஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிப்.14ஆம் தேதி நடக்கவிருக்கும் அஞ்சலக தேர்வை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளுடன் தமிழிலும் எழுதலாம் எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அஞ்சல்துறை வரலாற்றில் முதல்முறை... தமிழுக்கு கிடைத்த வெற்றி...” - சு. வெங்கடேசன் எம்.பி.

Published on 17/11/2021 | Edited on 17/11/2021

 

"For the first time in the history of the postal service, a certificate of appreciation in Tamil ..." - S. Venkatesh MP

 

அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிற பாராட்டுச் சான்றிதழ் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டுவந்த நிலையில், தற்போது முதல்முறையாக தமிழில் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டுவருகிறது. 

 

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இதுகுறித்து செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘அஞ்சல் அலுவலக பண விடைகள் (Money order), சிறு சேமிப்பு படிவங்கள் (Small savings forms) இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்ததைச் சுட்டிக்காட்டி இந்திய ஆட்சிமொழி சட்டங்களின்படி மாநில மொழிக்கான உரிமைகளைப் பறிப்பதை அனுமதிக்க முடியாது, சட்டத்தை மீறி இந்தி திணிக்கப்படுவதை ஏற்க மாட்டோம் என்பதை அமைச்சகத்துக்கு உறுதிபட தெரிவித்தோம். அனைத்துப் படிவங்களும் தமிழில் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

 

அதனையடுத்து, சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை சந்தித்தபோது அஞ்சல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து படிவங்களும் தமிழில் இருக்கும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆட்சிமொழி சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படும் என உறுதியளித்தார்.

 

"For the first time in the history of the postal service, a certificate of appreciation in Tamil ..." - S. Venkatesh MP

 

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களுக்கும் தமிழ் படிவங்கள் விரைந்து அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தனர். தற்போது பல அஞ்சலகங்களுக்குத் தமிழில் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டு கிடைத்துள்ளன. அதனைப் பலரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்துவருகின்றனர்.

 

தற்போது அடுத்தக்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. அஞ்சல்துறை ஊழியர்களுக்கு துறைரீதியாக வழங்கப்படுகிற பாராட்டுச் சான்றிதழ் இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. ஆனால், தற்போது அஞ்சல்துறை வரலாற்றில் முதல்முறையாக தமிழ் முதன்மை மொழியாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

 

இது அஞ்சல் தமிழுக்குக் கிடைத்த அடுத்தக்கட்ட வெற்றி’ என்று தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

அஞ்சல் துறை தேர்வு ரத்து, தமிழில் தேர்வு எழுத அனுமதி!- திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி அறிக்கை.

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

தமிழ்நாட்டில் அஞ்சல் துறையில் 1000 பணியாளர் இடங்களுக்கான தேர்வை தமிழில் எழுதக்கூடாது; இந்தியிலும், ஆங்கிலத்திலும் தான் எழுத வேண்டும் என்று தேர்வுக்கு முதல் நாள் திடீரென்று மத்திய அரசு அறிவித்தது - கடும் அதிர்ச்சியை அளித்தது. தேர்வு எழுத இருந்தவர்கள் உள ரீதியாக உளைச்சலுக்கு ஆளானார்கள். திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன அறிக்கை வெளியிட்டோம். தேர்வை ரத்து செய்யவேண்டும் அல்லது ஒத்தி வைக்கவேண்டும் என்று அந்த அறிக்கையில் (13.7.2019) வெளியிட்டும் இருந்தோம். நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.,க்கள் கட்சிகளை மறந்து எதிர்ப்புக் குரல் கொடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தோம். அதே போல, இன்று (16.7.2019) நாடாளுமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

Postal exams canceled, permission to write exams in Tamil - says Dravidian President K Veeramani

 

 

 

நேற்று (15.7.2019) தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இதுகுறித்து தி.மு.க. பிரச்சினையைக் கிளப்பியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்காத நிலையில், தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். இந்த எதிர்ப்புகள் எல்லாம் சேர்ந்து மத்திய அரசைப் பணிய வைத்ததன் விளைவாக இன்று (16.7.2019) பிற்பகல் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தமிழ் உள்பட மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். '37 பேர் நாடாளுமன்றத்திற்குள் சென்றால் என்ன சாதிக்க முடியும்?' என்று கேட்டவர்களுக்கு இது தான் சரியான பொருத்தமான பதிலாகும். மாநில உணர்வுகளையும், உரிமைகளையும், மொழிகளையும் மதிக்கும் போக்கு இந்தப் புள்ளியிலிருந்தாவது மத்திய அரசு தொடங்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் அழுத்தமான கோரிக்கை.