/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fcwed.jpg)
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள அரவிந்த் நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள், பழுதடைந்து மோசமான நிலையில் 200 மீட்டர் நீள சாலையைசீரமைக்கக் கோரி, சிரிப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். தங்கள்கோரிக்கைகளை வலியுறுத்தும்பேனர்களைக் கையில் ஏந்தியபடி அவர்கள் சத்தமாகச் சிரித்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
பழுதடைந்த சாலையை அரசால் சீரமைக்க முடியாததால், தாங்கள் இந்தச் சிரிப்பு போராட்டத்தை நடத்துவதாக அந்த நகரில் வசிக்கும் ஒருவர் கூறியுள்ளார். மேலும், மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும்அரசால் சாலை போடப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)