சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. தமிழகத்திலும் சிலருக்கு அந்த பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதல் கோழி, ஆடு முதலியவற்றின் இறைச்சியில் இருந்து பரவுகின்றது என்று இதுவரை யாரும் நிரூபிக்காத நிலையில், அதன் விற்பனை தற்போது பெரிய அளவில் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக கோழி இறைச்சி பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது பிராய்லர் ஒருகிலோ உயிர் கறிக்கோழி ரூபாய் 38 என்ற அளவில் வட இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கறி விற்பனை செய்பவர்களும் பண்ணைகளில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்வதை குறைத்துள்ளனர்.