Skip to main content

இளம்பெண்ணுக்கு சரியாக முடிவெட்டாத சலூன் கடைக்கு கோடிக்கணக்கில் அபராதம்!!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

sdf

 

டெல்லியைச் சேர்ந்தவர் இளம்பெண் தாரா சரண். இவர் மாடலிங் துறையில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் சலூன் கடைக்குச் சென்ற அவர், முடித்திருத்தம் செய்ய கூறியுள்ளார். தான் மாடலிங் துறையில் இருப்பதால் கவனமாக முடித்திருத்தம் செய்யுங்கள், அதிகமான அளவு முடியை கட் செய்துவிடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். அங்கிருந்த ஊழியரும் சரி என்று கூறி முடித்திருத்தம் செய்ய ஆரம்பித்துள்ளார். 

 

இந்நிலையில், கண்களை மூடி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த தாரா, குறிப்பிட்ட நேர இடைவெளியில் கண்களைத் திறந்து பார்த்தபோது, தான் கூறிய அளவை விட அதிகப்படியான முடியை வெட்டியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தான் கூறியதைவிட ஏன் அதிகமான அளவு முடியைக் குறைத்தீர்கள் என்று கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர் சரியான பதில் கூறாத நிலையில், அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துள்ளார். முடி வெகுவாக குறைக்கப்பட்டதால், அவரது மாடலிங் வாய்ப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இதுதொடர்பாக நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டார் தாரா சரண். வழக்கை விசாரித்த ஆணையம் தவறு செய்த சலூன் கடைக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமான ஓடுதளத்தில் உணவருந்திய பயணிகள்; இண்டிகோ நிறுவனத்துக்கு அபராதம்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Penalty for Indigo for Passengers eating on the runway

டெல்லியில் இருந்து கோவாவிற்கு சுமார் 18 மணி நேரம் தாமதமாக இண்டிகோ விமானம் ஒன்று கடந்த 16ஆம் தேதி புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானம் பனிமூட்டம் காரணமாக நடுவழியிலேயே திருப்பி விடப்பட்டது. மும்பையில் தரை இறங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.விமானத்திலிருந்து இறங்கிய பயணிகள் விமானத்தின் அருகிலேயே அமர்ந்து சாப்பிட்டதோடு, அங்கேயே ரெஸ்ட் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது.

இதுகுறித்து ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நள்ளிரவில் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையம் ஆகியவை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அன்றைய தினத்திற்குள் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. 

ஆனால், இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என இண்டிகோ விமான நிறுவனத்துக்கும், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கும் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி மற்றும் மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் என விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 

Next Story

ஆபாச வீடியோ: கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட மாடல் அழகி 

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
divya pahuja case

டெல்லி, ஹரியானவை சேர்ந்தவர் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா (27). இவர் கடந்த 2 ஆம் தேதி குருகிராமில் உள்ள ஒரு ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலை இரண்டு நபர்கள் ஓட்டலிலிருந்து இழுத்துச் சென்று, காரில் ஏற்றும் சிசிடிவி காட்சி வெளியானது. இதையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் ஓட்டலின் உரிமையாளர் அபிஜித் சிங் உட்பட மூன்று பேரை கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், அபிஜித் சிங்கின் ஆபாச வீடியோக்களை காட்டி திவ்யா அவரை மிரட்டி வந்ததாகவும், அதன் காரணத்தால்தான் அபிஜித் சிங் திவ்யாவை கொலை செய்தது தெரிய வந்தது. ஆனால் திவ்யாவின் குடும்பத்தார் இதை மறுத்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அபிஜித் சிங்கின் நெருங்கிய நண்பரான பல்ராஜ் கில் என்பவரை கடந்த 11 ஆம் தேதி கொல்கத்தா விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில், திவ்யாவின் உடலை அபிஜித் சிங் அப்புறப்படுத்த சொன்னதால், ஓட்டலில் இருந்து 150 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பக்ராவில் உள்ள கால்வாயில் வீசியதாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றினர். குளிரின் காரணமாக உடல் அழுகவில்லை என்று கூறிய அவர்கள், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு திவ்யாவின் குடும்பத்தார், உடலில் இருக்கும் இரண்டு டாட்டூக்களின் அடையாளம் கண்டு இது திவ்யாவின் உடல் என உறுதி செய்துள்ளனர். மேலும் அபிஜித் சிங், பல்ராஜ் கில் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திவ்யா பஹுஜா, கடந்த 2016 ஆம் ஆண்டு குருகிராம் பகுதியின் ரவுடியான சந்தீப் கடோலியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.