ADVERTISEMENT

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்... ஆளுநர் தமிழிசை உத்தரவு!

11:11 AM Apr 09, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டைவிட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.

பல்வேறு மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தெலுங்கானாவில் மக்கள் மாஸ்க் போடாவிடில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மதம் சார்ந்த விழாக்கள், நிகழ்ச்சிகளுக்குத் தடைவிதித்தும், மக்கள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணியவில்லை என்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கரோனா பரவலை தடுக்க இரவு 12 மணி முதல் காலை 5 மணிவரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT