Advertisment

பெகாசஸ்; மத்திய அரசு முழுமையாக ஒத்துழைக்கவில்லை - விசாரணைக்குழு 

pegasus

Advertisment

பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு முழுமையாக ஒத்துழைக்க வில்லை என உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசி அழைப்புகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கையில் "தொழில்நுட்ப குழுவிடம் கொடுக்கப்பட்ட 29 செல்பேசிகளில் 5 செல்பேசிகளில் மட்டுமே வைரஸ் இருந்தது. அனால் அதுவும் பெகாசஸ் தொழில்நுட்பம் தொடர்பான வைரஸ் தான் என உறுதியாக கூறமுடியாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ரவீந்திரன் குழு, மூன்று பாகங்களாக தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தது. முதல் இரண்டு பாகங்கள் தொழில்நுட்ப குழுவின் அறிக்கையாகவும், மூன்றாம் பாகம் மேற்பார்வைக்குழுவின் அறிக்கையாகவும் (நீதிபதி ரவீந்திரன்) தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.அதில், 'நாட்டின் இணைய பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும். பொதுமக்களின் தகவல்கள் பாதுகாக்கப் படுவதை உறுதிசெய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, "பெகாசஸ் தொடர்பான அறிக்கைகள் சில தனிப்பட்ட தகவல்களை கொண்டிருப்பதால் அதை பொதுவெளியில் பகிர முடியாது" என தெரிவித்தார்.

supremecourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe