Advertisment

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கண்டித்து பழ.நெடுமாறன் ஆர்ப்பாட்டம்

 Paz. Nedumaran protest against CBSE syllabus

Advertisment

புதுச்சேரி மாநிலத்தில் இந்த கல்வியாண்டு முதல் மாநில அரசு பாடத்திட்டத்தை கைவிட்டு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் மத்திய அரசின் கல்வி வாரியப் பாடத்திட்டத்தைத் திணித்து தமிழ் மொழியை அழிக்கத் துடிக்கும் புதுச்சேரி அரசின் நடவடிக்கையை எதிர்த்து தமிழர் தேசிய முன்னணி சார்பில் அதன் நிறுவனர் பழ.நெடுமாறன் தலைமையில் சாரம் அவ்வைத்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 Paz. Nedumaran protest against CBSE syllabus

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன் பேசுகையில், " ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரையிலான கல்வி வரை மாநில அரசின் பட்டியலில் தான் இருக்க வேண்டும். இதை மத்திய அரசின் பட்டியலுக்கு மாற்றப்பட்டது மொழி திணிப்புக்கு வழிவகுக்கும்.இதை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

nedumaran Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe