
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பணிகளில் அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக ஆந்திராவில் நாடாளுமன்றத்தேர்தலும் சட்டமன்றத்தேர்தலும் ஒன்றாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் 'வாராகி யாத்ரா' என்ற பெயரில் நடைப்பயணம் ஒன்றைத்தொடங்கிப் பேசி வருகிறார்.
அண்மையில் நடந்த கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா, 'பவன் கல்யாண் முதலமைச்சருக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் பொழுது சன்னி லியோன் ஒழுக்கத்தைப் பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது' எப்பொதுக்கூட்ட மேடை ஒன்றில் பேசியுள்ளார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
பவன்கல்யாணின் 'வாராகி யாத்ரா' தொடர்ந்து நடந்து வரும் நிலையில் செல்லும் இடத்திலெல்லாம் பவன் கல்யாண் ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். பிரச்சார வாகனம் போன்ற சிறு வாகனத்தில் வலம் வரும் பவன் கல்யாண் ரசிகர்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் வெளியே நின்று கையசைத்து தனது நன்றியை வெளிப்படுத்தி வருகிறார். ரசிகர்களும் அவரை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில் அவரை ஆச்சரியப்படுத்த ரசிகர் ஒருவர் கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி சால்வை அணிவிக்க முயன்றார். அந்தரத்தில் தொங்கியபடி நபர் ஒருவர் வருவதைக் கண்டு சற்று ஜெர்க் ஆன பவன் கல்யாண் எப்படியோ ரசிகரின் சால்வையை ஏற்றுக்கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)