ஆந்திரா துணை முதல்வராகப் பதவியேற்ற பவன் கல்யாண்!

pawan Kalyan sworn in as Deputy Chief Minister of Andhra Pradesh

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்தத்தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள்கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.

அந்த வகையில் சட்டமன்றத்தேர்தலில்சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, ஆந்திர அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன.

அதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குச் சட்டம் மற்றும் ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அனைத்து துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராகவும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல்; சுற்றுச்சூழல், காடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த நிலையில், ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் இன்று (19-06-24) ஆந்திராவில் உள்ள துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்
Subscribe