Pavinaben Patel confirms medal at Paralympics

Advertisment

ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கானபாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 24 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இன்று காலை இந்தியாவின்பவினாபென் படேல், பெண்களுக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறி, பாரா ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

Advertisment

இந்தநிலையில்தற்போதுபவினாபென் படேல்,செர்பியாவின் போரிஸ்லாவா ராங்கோவிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மேலும் பாரா ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையும் படைத்துள்ள நிலையில், பதக்கத்தை உறுதி செய்துள்ளார்பவினாபென் படேல்.