Advertisment

பிராங்க் செய்த மாணவர்கள்; காவல் நிலையத்தில் புகாரளித்த முதல்வர்...

ghjnghy

பாட்னாவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள், அவர்கள் கல்லூரி முதல்வரை ஏமாற்றியதால்,மாணவர்கள் மீது அவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். கல்லூரியில் சரஸ்வதி பூஜை நடத்துகிறோம் என கூறி கல்லூரி முதல்வர் மற்றும் துணை தலைவரை மாணவர்கள் அழைத்துள்ளனர். பூஜை நடப்பதாக கூறப்பட்ட அறையில் அவர்கள் இருவரும் நுழைந்த உடன் சத்தமாக ஒலித்த சினிமா இசையுடன் நடன பெண்களும், மாணவர்களும் சேர்ந்து நடனமாடியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முதல்வரும், துணை தலைவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார். அதன் பின் இதனை விசாரிக்க கல்லூரி ஆசிரியர்கள் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் முடிவு எட்டப்படாததால் கல்லூரி முதல்வர், பூஜை குழுவை சேர்ந்த ஐந்து மாணவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி கல்லூரி முதல்வர் கூறும்போது, 'கண்டிப்பாக இதனை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியுள்ளார்.

Advertisment

patna College students prank
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe