Advertisment

பா.ஜ.க. அலுவலகத்தில் கரோனா தாக்கம்... 24 பேர் பாதிப்பு...

patna bjp office turns into corona hotspot

Advertisment

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திலிருந்த 24 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், சுகாதார ஊழியர்கள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பட்ட மக்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பா.ஜ.க. மாநிலத் தலைமை அலுவலகத்தில் இருப்பவர்கள் 24 பேருக்குக் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாட்னாவில் உள்ள அலுவலகத்திற்குச் சமீபத்தில் கரோனா பாதித்த நோயாளி ஒருவர் வந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அங்குள்ள கட்சி நிர்வாகிகள், அலுவலக ஊழியர்கள் உள்பட 110 பேருக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனைகளின் முடிவில், மாநில துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட 24 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

corona virus Bihar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe