Advertisment

குஜராத் பாஜக தலைவர் மாற்றம்...

patil appointed as gujarat bjp president

Advertisment

குஜராத் பாஜக தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஆர். பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.ஆர்.பாட்டில் மற்றும் ஜம்யாங் செரிங் நம்கியால் ஆகியோரை முறையே குஜராத் மற்றும் லடாக் பாஜக தலைவர்களாக அறிவித்துள்ளது பாஜக தலைமை.குஜராத்தின் நவ்சாரியைச் சேர்ந்த பாட்டில் கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்றதேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகதேர்வானார். இந்நிலையில், குஜராத் பாஜக தலைவராக இருந்த ஜிதேந்திரபாய் வாகானிக்கு பதிலாக தற்போது இவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 65 வயதான பாட்டில், பிரதமரின் வாரணாசி தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், மக்களுடனான தொடர்பை மேம்படுத்தவும் பிரதமர் மோடியால் பரிந்துரை செய்யப்பட்டவர் ஆவார்.

அதேபோல லடாக் பாஜக தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 35 வயதான நம்கியால், கடந்த தேர்தலில் லடாக்கிலிருந்து முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது முதல் கூட்டத்தொடரிலேயே தனது பேச்சுத்திறமையால் இந்தியா முழுவதும் பிரபலமான இவர், பிரதமர் மோடி மற்றும் பாஜக உயர்மட்ட தலைவர்களின் பாராட்டைப் பெற்றவர் ஆவார்.

Gujarat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe