/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mh-hospital.jpg)
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 72 மணி நேரத்தில் 31 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் என்ற இடத்தில் சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவு எனப் பல்வேறு மருத்துவத்துறைகளுடன் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உட்பட 31நோயாளிகள் கடந்த 72 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையின் டீன் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் 72 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மருத்துவமனையில் மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக மருத்துவமனையின் டீன் பகீர் தகவலைத்தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)