Skip to main content

இரயிலில் சார்ஜ் போட பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு - இரயில்வேயின் அதிரடி அறிவிப்பு!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

railways

 

இந்திய இரயில் பயணிகள், நீண்ட நேர பயணத்தின்போது தொலைபேசி, கணினி போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்வது வழக்கம். இந்தநிலையில், சமீபத்தில் சில இரயில்களில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகள் மின்னணு பொருட்களை சார்ஜ் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

 

தீ விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு, இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை பயணிகள் மின்னணு பொருட்களை சார்ஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இக்குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜர் பாய்ண்டுகளுக்கு (charger points) மின்சாரம் இரத்து செய்யப்படும் எனவும் இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்