Advertisment

குடிபோதையில், விமானத்தில் சார்ஜ்போட அலைந்த இளைஞர்....

cockpit

கடந்த திங்கள் அன்று மும்பையிலிருந்து கொல்கத்தா செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ஒருவர். விமானிகள் இருக்கும் கேபினின் கதவை திறக்க முயன்றுள்ளார். அவ்வாறு அவர் செய்ததால் விமானத்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் இருந்துள்ளனர். பின்னர், எதற்காக அப்படி செய்தீர்கள் என்று விசாரித்தற்கு என் மொபைலில் சார்ஜ் தீர்ந்துவிட்டது, சார்ஜ் செய்யதான் விமானிகள் இருக்கும் கேபினை திறக்க முயன்றேன் என்று கூறியிருக்கிறார். விமானம் தரையிரக்கப்பட்டதும் போலிஸாரிடம் பிடித்து கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.

Advertisment

விசாரணையில் அந்த இளைஞர் குடிபோதையில் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால்தான் மற்ற விமான பயணிகள் பேச்சையும் கேட்காமல் விமானிகள் இருக்கும் கேபினை திறந்து, தனது மொபைலுக்கு சார்ஜ் செய்ய முயன்றுள்ளார். பாதுகாப்பின் காரணமாக விமானிகள் மீண்டும் மும்பைக்கே விமானத்தை தரையிறக்கப்பட்டது.

Advertisment
indigo flight India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe