/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ghdancn_0.jpg)
அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியின் தீன் தயாள் உபாத்யாய் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் பார்ட்டி வைத்து இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு ஜான்சி அரசு மருத்துவமனையின் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்த வீடியோ வெளியானது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தீபாவளிக்கு முன் நான்கு பணியாளர் செவிலியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும், அந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடன நிகழ்ச்சி அந்த மருத்துவமனையில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனை தலைமை மருத்துவப் பணியாளரான இரண்டு மருத்துவர்கள் மற்றும் சில செவிலியர்கள் ஆகியோர் சீருடையுடன் நடனமாடும் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)