Advertisment

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

parliment rainy season all party meeting

மழைக்காலக் கூட்டத்தொடரின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த வருடத்திற்கான மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisment

இந்நிலையில், அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் ஜூலை 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தின் போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

Meeting Parliament
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe