indian parliament

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 தேதி வரை நடைபெறவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மழைக்கால கூட்டத்தொடரைப் போலவே இந்த குளிர்கால கூட்டத்தொடரிலும் பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள், பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, லக்கிம்பூர் வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பலாம் எனக் கருதப்படுகிறது.

Advertisment

நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. அதேபோல் பல்வேறு சட்டங்கள், கடும் அமளிக்கு இடையே மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியைத்தொடர்ந்து, மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.