நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின்ஆதிர் ரஞ்சன்சவுத்திரி, விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க, சிறியகுளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டவேண்டும் எனக் கடிதம் மூலமாகக் கோரிக்கைவிடுத்தது பிரஹலாத் ஜோஷிக்குகடிதம் எழுதியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள நாடாளுமன்றவிவகாரத்துறைஅமைச்சர்பிரஹலாத் ஜோஷி, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்இந்தமுறை நடத்தப்படாது என்றும், அதற்குப் பதிலாக அரசுபட்ஜெட் தொடரைமுன்கூட்டியே நடத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது பற்றி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் விவாதித்ததாகவும், அவர்கள் குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்யவே ஆதரவாக இருந்ததாகவும்கூறியுள்ளபிரஹலாத் ஜோஷி, கரோனாபரவல் காரணமாகவே, இக்குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.